ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் விலை என்ன தெரியுமா? விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம்!
இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் 96 வயதில் காலமானார். செப்டம்பர் 8 அன்று மாலை 6 மணிக்குப் பின்னர் ராணி எலிசபெத் மறைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இவரின் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, ராணி எலிசபெத்தின் மறைவுக்கு பின் அவரது மகனான 73 வயது சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றார்.

டீ பேக்கின் விலை
இந்த நிலையில், ராணி எலிசபெத் பயன்படுத்திய தேநீர் கோப்பையில் பயன்படுத்திய டீ பேக்-ஐ, eBay எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் விற்கப்போவதாக அறிவித்துள்ளது.

அதாவது, சுமார் 12,000 டாலருக்கு , அதாவது இந்திய மதிப்பில் ரூ.9.5 லட்சத்திற்கு அந்த டீ பேக்கின் விலை என கூறப்படுகிற து.
இந்த, டீ பேக் என்ன சிறப்பு என்றால், ராணி எலி சபெத் 1990-களில் அவரு க்காக விண்ட்சர் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் கூறப்படுகிறது.