குயின் எலிசபெத் உடல் அருகே இருந்த காவலர் திடீர் மயக்கம்! நடந்தது என்ன?
மகாராணி எலிசபெத்தின் உடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளி திடீரென்று மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு பின் அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், அரச வழக்கப்படி பல இடங்களில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி ராணி நீண்ட காலமாக வாழ்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு அங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு மகாராணி 2-ம் எலிசபெத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய பெட்டியை சுற்றி காவல் காக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, ராணி எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு அருகில் கண்காணிப்பில் இருந்த காவலர் மேடையில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அருகில் இருந்த கா