Chanakya Niti: நாயின் இந்த 4 குணங்கள் இருக்கும் ஆண்கள் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்.. உங்க கணவரிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, விலங்குகளின் குணங்கள் அடிப்படையாக வைத்து மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் கணிக்கப்படுகின்றன.
அதாவது பெண்கள் காகத்தைப் போலவும், ஆண்கள் நாய்களைப் போலவும் இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. அத்தகைய குணம் கொண்டவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
அந்த வகையில், ஒரு மனிதன் நாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாயிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்
1. ஆழ்ந்த உறக்கத்தில் கூட நாய்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும். இந்த குணம் ஒவ்வொரு ஆண்களிடமும் இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். மனைவி, குடும்பம் பற்றிய சிந்தனை எப்போதும் ஒரு ஆணுக்கு இருக்க வேண்டும்.
2. நாய் எப்போதும் நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு பெயர் பெற்ற உயிரினம். இந்த குணம் ஆண்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியிடம் நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும். அத்தகைய குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
3. விலங்குகளிடம் இருக்கும் முக்கிய குணங்களில் தைரியமும் ஒன்று. அதே போன்று தான் நாய்கள், விசுவாசத்திற்கு பெயர் போன விலங்குகளில் நாய்களும் ஒன்று. இந்த குணம் ஆண்களிடம் அவசியம் இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் ஆண்கள் தைரியமாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்திற்காக தன் உயிரை கூட தியாகம் செய்யும் குணம் ஆண்களிடம் இருக்க வேண்டும்.
4. பொதுவாக விலங்குகள் தங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் மனிதர்கள் பேராசையுடன் இருப்பார்கள். இந்த குணம் கொண்ட ஆண்களிடம் வாழ்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |