சாணக்கிய நீதி: உங்க மகனிடம் இந்த குணங்கள் இருக்கா? அப்போ பெற்றோரின் மகிழ்ச்சி அழிவது உறுதி
தொன்று தொட்டு பெரும்பாலனவர்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு நீதி நூலாகவே சாணக்கிய நீதி பார்க்கப்படுகின்றது.
பண்டை காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்து உலகம் முமுவதும் பிரசித்தி பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் மனதனின் வாழ்வியலுக்கு தேவையான பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாணக்கியரின் கூற்றுக்கு இணங்க சிறந்த மகனிடம் அவசியம் இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நல்ல மகனின் முக்கிய குணங்கள்
சாணக்கியரின் கருத்துப்படி எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத மகன் கிடைப்பது ஒரு தாய்க்கு கிடைக்கும் மிகப்பெரிய வரமாகும் என்கின்றார். தீய குணங்கள் கொண்ட மகன் பெற்றோரின் மகிழ்ச்சியை மொத்தமாக அழித்துவிடுகின்றான்.
சாணக்கியர் கூற்றின் பிரகாரம் அறிவில் சிறந்த ஒரு மகன் நூறு ஞானிகளுக்கு சமம் என்கின்றார். இப்படி அறிவாற்றல் நிறைந்த மகனால் எப்போதும் பெற்றோருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், ஆறுதலம் கிடைக்கும். இப்படிப்பட்ட மகனை பெற்றமைக்காக நிச்சயம் பெற்றோர் பெருமை கொள்ளும் நிலை உண்டாகும்.
புத்திசாலித்தனம் இல்லாத மகனால் அவன் வாழ்விலும் சரி தனது குடும்பத்தார் வாழ்விலும் சரி எந்த முன்னேற்றமும் இருக்காது.
புத்திசாலித்தனம் ஒருவரின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது. புத்தி இல்லாத மகன் பெற்றோருக்கு பல வழிகளிலும் துன்பத்தையே கொடுப்பான் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
புத்திசாலித்தனமான மகன்களைப் பெற்றெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் பரிசாகப்பெறுகின்றார்கள்.
ஜாதகத்தின் பிரகாரம் மகனுக்கு கெட்ட பழக்கம் இருந்தால், அவர்கள் பிறக்காமல் இருப்பதே சிறப்பு என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்தளவுக்கு ஒருவருக்கு ஒழுக்கம் இன்றியமையாதது. ஒழுக்கமற்ற நெறி தவறிய வாழ்வை வாழ்வதிலும் பார்க்க பிறக்காமல் இருப்பதே நல்லது என்கின்றார்.
உங்கள் மகனுக்கு பெற்றோர் மற்றும் வயதில் மூத்தவர்களை மதிக்கும் குணம் இருந்தால், அவன் நிச்சயம் பெற்றோரின் இறுதி காலத்தில் பக்க பலமாக இருப்பான். இந்த குணம் இல்லாத மகனால் பெற்றோர் இறுதி காலத்தில் ஒதுக்கி வைக்கப்படலாம் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் உங்கள் மனனிடம் குடும்பத்தை நேசிக்கும் குணம் இருந்தால் நீங்கள் மிகப்பெரும் அதிர்ஷ்டசாலிகள். இந்த குணம் இல்லாத மகன் தன் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |