ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்...
பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு கார் வாங்குவது மற்றும் கார் ஓட்டுவது இரண்டிலும் அலாதி இன்பம் இருக்கும்.
ஆனால் சாலை விதிகளை பின்பற்றுவது என்றாலே பலருக்கும் எரிச்சல் உணர்வு ஏற்படுவது வழக்கம். சாதாரணமான சாலை விதிகளை பின்பற்றுவதே பலருக்கும் இயலாத காரியம்.
அப்படி இருக்கையில், உலகில் பல்வேறு நாடுகளிலும் வித்தியாசமான மற்றும் வினோதமான சாலை விதிகள் நடைமுறையில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
அப்படி ஒருசில நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் வித்தியாசமான சாலை விதிமுறைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வினோதமான சாலை விதிகள்
நியூயார்க் நகரத்தல் தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பது சட்ட விரோதமானது. இந்த நாட்டில் தேவையில்லாமல் ஹார்ன் எடுப்புவதற்கு $350 வரையில் அபராதம் விதிக்கப்படுகின்றது.
இவ்வாறு செய்வது ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தில் பிளாக் மார்க்குகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு வழிவகுக்கும்.
அது போல் சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கார்களைக் கழுவக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாகக் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நாளில் காரை கழுவுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பெலாரஸில், இரண்டு சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில் கட்டாயம் தீயணைக்கும் கருவியை வைத்திருக்க வேண்டியது அவசியம். குறித்த விடயம் பெலாரஸில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி முதலுதவி பெட்டி, எச்சரிக்கை முக்கோணம், வெளிப்புற விளக்குகளுக்கான உதிரி பல்புகள், ஹெட்லேம்ப் மாற்றிகள் மற்றும் ஸ்டெப்னி போன்ற பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.
ஜெர்மனியில் கார் ஒரு தனியார் இடமாகவே பார்க்கப்படுகின்றது. இதில் இவர்களுக்கு முழு சுதந்திரம் மற்றும் உரிமை காணப்படுகின்றது. எனவே அங்கு நிர்வாணமாக கார் ஓட்டுவது சட்ப்படி அணுமதிக்கப்படுகின்றது.
ஆனால் காரில் இருந்து இறங்கும் பட்சத்தில், ஓட்டுநர்கள் ஆடை அணிய வேண்டும். அதாவது அவர்களின் எல்லைக்குள் இருந்து சமூகத்துக்குள் பிரவேசிக்கும் போது ஆடை கட்டாயமாகும்.
அது போல் பிலிப்பைன்ஸில் விரும்பிய நாளில் வாகனம் ஓட்ட முடியாது.லைசென்ஸ் பிளேட் 1 அல்லது 2 இல் முடிவடைந்தால், திங்கட்கிழமை வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
எல்லா நாடுகளிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து விதிகளை மீற அவர்களும் உடந்தையாக இருந்தமைக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட வினோதமான சாலை விதிகளை இந்த நாடுகள் கடைப்பிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |