ஆட்சியில் இருக்கும் போதே 2வது திருமணம் செய்து கொண்ட முதல்வர்! வைரலாகும் புகைப்படங்கள்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் போட்டியிட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று, பக்வந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கும் டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்
பகவந்த் மான், 48, ஏற்கனவே இந்தர்ஜீத் கவுர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2015ல் கருத்து வேறுபாடு காரணமாக இந்தர்ஜீத் கவுரும், பகவந்த் மானும் பிரிந்தனர்.
பகவந்த் மான், பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற போது, அமெரிக்காவில் இருந்து வந்த இரு குழந்தைகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எளிய முறையில் நடந்த 2வது திருமணம்
இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தங்கள் குடும்பத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய 32 வயதான டாக்டர் குர்பிரீத் கவுர் என்ற பெண்ணை, பகவந்த் மான் திருமணம் செய்ய சம்மதித்தார்.
இரண்டாவது திருமணம் என்பதால், ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டு, மிகவும் எளிமையாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதற்காக, பகவந்த் மானின் அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர், சொந்த ஊரான சடோஜ்ஜில் இருந்து, முதல்வரின் இல்லத்திற்கு வந்தனர்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மானின் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் முன்னிலையில் குர்பிரீத் கவுரை திருமணம் செய்தார் பகவந்த் மான்.
Punjab CM Bhagwant Mann ties knot with Dr Gurpeet Kaur in a close-knit ceremony in Chandigarh pic.twitter.com/VGfCP25lE4
— ANI (@ANI) July 7, 2022