நீரிழிவு நோயை சரிச் செய்யும் பரங்கி விதைகள்- யாரெல்லாம் சாப்பிடலாம்?
பரங்கி விதைகளை நீரழிவு நோயை கட்டுபடுத்தும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏனெனின் நீரிழிவு நோயாளிகளின் உடலில் போதிய இன்சுலினை சுரக்காமல் பரங்கி விதைகள் பார்த்து கொள்ளும். இதனால் உணவு கட்டுபாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
பரங்கி விதைகளில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், நீரிழிவு நோயாளர்கள் சர்க்கரையை கட்டுபடுத்துவது போன்று வேறு என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பயன்கள்
1. பரங்கிக்காயில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன. அதில் மெக்னீசியம், சிங்க், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளடங்கும். இதனை தினமும் எடுத்து கொள்ளும் ஒருவருக்கு எலும்பு ஆரோக்கியம் சீராக இருக்கும்.
2. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கும் பரங்கிக்காய் விதைகளில் கரோட்டினாய்ட் மற்றும் வைட்டமின் இ ஆகியன உள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடும். அத்துடன் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.
3. பரங்கி விதைகளில் இருக்கும் மெக்னீசியச் சத்துக்கள், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தி, சீராக இயங்கச் செய்கிறது. கெட்ட கொழுப்புக்களை சீராக வைத்து கொள்ளும் பரங்கி விதைகளை தினமும் எடுத்து கொள்ளலாம்.
4. பரங்கிக்காய் விதைகளில் புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் இவை இரண்டும் உள்ளன. இது வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதனால் அதிகமாக சாப்பிட வேண்டியதில்லை. அன்றாடம் காலையில் எடுத்து கொண்டால் பசி கட்டுக்குள் இருக்கும்.
5. பரங்கிக்காய் விதைகளில் உள்ள வைட்டமின்கள், ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் மினரல்கள் ஆரோக்கியமான தலைமுடியையும் சருமத்தையும் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ, சிங்க் சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை நீண்ட நாட்கள் வரை பாதுகாக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
