பூஜையறையில் வைக்க கூடாத சிலைகள்: எந்த சிலைகளை வைக்க வேண்டும் தெரியுமா?
வீட்டின் மிகவும் புனிதமான இடமென்றால் அது பூஜையறை தான். அந்தப் பூஜையறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மேலும், பூஜையறையில் உடைந்த பொருட்கள் எதனையும் வைக்க கூடாது. எப்போதும் பூஜையறையில் விளக்கு எரிந்துக் கொண்டே இருக்க வேண்டும் என பல விடயங்கள் இருக்கின்றன.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என பெரியோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அதற்கேற்றால் போல வீடுகளிலும் சில இடங்களில் ஆன்மீகத்திற்காகவும் அழகிற்காகவும் சில சிறிய சிறிய கடவுள் சிலைகளை வைப்பது வழக்கம்.
அந்தவகையில் அன்றாடம் நாம் வீட்டில் பூஜைகள் செய்வது எமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வாறு நாம் வீடுகளில் சில சிலைகளை வைத்து வழிபடக்கூடாது என வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது.
பூஜை அறையில் வைக்க கூடாத சிலைகள்
- ராகு-கேது, சனி பகவான் மற்றும் காளி தேவியின் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது
- மரணித்த உறவினர்களின் படத்தை பூஜையறையில் வைக்கக்கூடாது
- நின்றநிலையில் காட்சியளிக்கும் எந்த தெய்வங்களையும் வீட்டில் வைக்கக் கூடாது
- பெரிய சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது
- உக்கிரதெய்வங்களின் புகைப்படங்களையும் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது
- ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளையார் சிலைகளை வைக்க கூடாது
பூஜை அறையில் வைக்க வேண்டிய சிலைகள்
- வீட்டில் ஒரு விநாயகர் சிலை மட்டுமே வைத்திருக்க வேண்டும்
- மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் மகாலட்சுமியின் சிலை வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்
- மகாலட்சுமியுடன் விஷ்ணுவின் சிலையை வைத்தால் மங்களகரமானதாக இருக்கும்
- அனுமன் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டு பிரச்சனைகள் நீங்கும்
- ராமர் தர்பார் சிலையை பூஜையறையில் வைக்க வேண்டும்