இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீசுங்க.... இல்லை பேராபத்து! கையில் பணம் தங்கவே தங்காது?
ஒரு சிலர் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும் அபச குணம் கூட காரணமாக இருக்கலாம்.
அபசகுணமான பொருட்கள் நிறைந்த வீட்டில் லட்சுமி தேவி தங்குவதில்லை.
ஆகவே உங்கள் வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்க வேண்டுமென நினைத்தால், பின்வரும் பொருட்களை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.
உடைந்த சிலைகள்
உங்கள் வீட்டில் உள்ள சிலைகள் ஏதேனும் உடைந்திருப்பின், அதை தூக்கி எறியுங்கள். ஏனெனில் அம்மாதிரியான சிலைகளை வீட்டில் வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
உடைந்த பாத்திரங்கள்
வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்கள் உடைந்த நிலையில் இருக்கக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டில் உடைந்த பாத்திரங்கள் இருப்பின் தூக்கி எறிந்துவிடுங்கள். ஏனெனில் உடைந்த பாத்திரங்களை வைத்திருப்பது அபசகுணமாக கருதப்படுகிறது.
பழுதான மின்சார பொருட்கள்
உங்கள் வீட்டில் உள்ள மின்சார பொருட்கள் ஏதேனும் பழுதடைந்திருந்தால், அதை உடனே பழுது பாருங்கள். இல்லாவிட்டால் அதை தூக்கி எறியுங்கள். துரதிர்ஷ்டத்தின் அறிகுறி மற்றும் இது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
உடைந்த கடிகாரங்கள்
வீட்டில் உடைந்த கடிகாரங்கள் இருப்பது அபசகுணமாக கூறப்படுகிறது.
உடைந்த நாற்காலி
வீட்டில் உடைந்த டேபிள், நாற்காலி போன்றவை இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் நாற்காலிகள், மேஜைகள் போன்றவை நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
மோசான நிலையில் அல்லது உடைந்த நிலையில் இருக்கும் நாற்காலிகள், மேஜைகள் வீட்டில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
உடைந்த கண்ணாடிகள்
உடைந்த கண்ணாடிகள் வீட்டில் இருப்பது மிகவும் அபசகுணமாக கருதப்படுகிறது. உடைந்த கண்ணாடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும்.