நீ எனக்கு மகனாக பிறக்க வேண்டும் மாமா! உருகிய புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ், அவருடைய நீண்ட கால காதலியான பென்ஸியாவை திருமணம் செய்து கொண்டார்.
குக் வித் கோமாளி புகழ்
ஸ்டான்ட் அப் கொமெடி மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் புகழ், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டுள்ளார்.
எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் விடாமுயற்சியையும் விட்டுவிடாமல் இன்று ஜெயித்துக் காட்டியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் இவருக்கு துணையாக நின்றது வடிவேல் பாலாஜி தான், புகழ் அவரை செல்லமாக மாமா என அழைப்பதுண்டு.

பென்ஸியுடன் திருமணம்
இந்நிலையில் தன்னுடைய நீண்ட கால காதலியான பென்ஸியை இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்து கொண்டார், இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகின.
இன்று வடிவேல் பாலாஜியின் திருமண நாள் குறித்து பதிவு ஒன்றை புகழ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில்,
`இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன்.
உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்புறேன். எப்பவும் என் கூடத்தான் இருப்பீங்க.. கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்தக் கடவுளை வேண்டிக்கிறேன் மாமா!' என நெகிழ்ந்திருக்கிறார்.