Puducherry Masala: காரம் கொஞ்சம் தூக்கலாக புதுச்சேரி ஸ்டைல் மசாலா பொடி செய்ய தெரியுமா?
பொதுவாக ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு உணவுகள் பிரபலமாக இருக்கும்.
அந்த வகையில், புதுச்சேரி கிராமத்து சமையல் மக்களுக்கு மிகுந்த பிடித்தமான சுவையில் தனித்துவமாக இருக்கும்.
புதுச்சேரி உணவுகளில் அதிகமான பொடி பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்தும் தனித்துவமான பொடி எப்படி இலகுவாக அரைக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- நீட்டு காய்ந்த மிளகாய் - 1/2 கிலோ
- காஷ்மீரி மிளகாய் - 1/2 கிலோ
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் மிளகாயை தனித்தனியாக வெயிலில் காய வைக்கவும்.
அடுத்த நாள், நீட்டு மிளகாயில் காம்புகளை நீக்கவும்.

அதன் பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய வைத்த மிளகாயை சேர்க்கவும். 10 நிமிடங்கள் கொஞ்சம் வறுக்கவும்.
மிளகாய் அரைப்பதற்கு முன்பு இரண்டு மிளகாயை ஒன்றாக சேர்த்து 1 ஸ்பூன் சால்ட் தூவி மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
இதனை குழம்பு, கிரேவி, கறி, தொக்கு என எது செய்தாலும் 2 ஸ்பூன் சேர்க்கலாம். காரம் தூக்கலாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |