வீடே மணமணக்கும் புதுச்சேரி மீன் குழம்பு - இப்படி மசாலா அரைத்து செய்ங்க
பொதுவாக வீட்டில் மீன் குழம்பு வைப்பது சகஜம். இந்த மீன் குழம்பு வைக்கும் போது பல வகைகளில் வைக்க முடியும். புதுச்சேரி மீன் கழம்பு என்றால் எல்லோருக்கும்.
காரணம் இந்த பகுதியில் வைக்கப்படும் மீன குழம்பு மிக சுவையாகவும் அதன் தனித்துவ மசாலா சுவைக்கும் பெயர் பெற்றதாகும்.
இந்த மசாலா வைத்து எந்த மீனை குழம்பு வைத்தாலும் நன்றாக இருக்கும். அந்த வகையில் புததுச்சேரியில் பிரபலமான மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- தேவையான பொருட்கள் மீன் துண்டுகள் – 500 கிராம்
- வெங்காயம் – 1
- தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லி தூள் – 1½ டீஸ்பூன்
- சீரக தூள் – ½ டீஸ்பூன்
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- தேங்காய் பால் – ½ கப்

செய்யும் முறை
இந்த மீன் கும்பிற்கு புளியை ½ கப் சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். பின்னர் மீனை சிறிது மஞ்சள்தூள் மற்றும் உப்பில் பூசி வைக்கவும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறம் வந்ததும் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். சிறுது நேரம் கழித்து தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை சமைக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இவை அனைத்தும் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

இதில் புளி நீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். இதில் சுத்தம் செய்து சமைக்க மஞ்சள் பூசி வைத்த மீன் துண்டுகளை மெதுவாக போடவும்.
இந்த கலவையையை மூடி 10–12 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். நன்கு வெந்த நிலையில், தேங்காய் பாலை சேர்த்து 2–3 நிமிடம் மெதுவாக கொதிக்க விடவும். அவ்வளவு தான் புதுச்சேரி மீன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |