புதினா கொத்தமல்லி தோசை இப்படி ஒரு முறை செய்து ருசியுங்கள்...இனி அடிக்கடி செய்வீங்க!
கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும்.
புதினா கொத்தமல்லி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தோசை மாவு - 2 கப்
- கொத்தமல்லி - 3/4 கப்
- பச்சை மிளகாய் - 5
- புதினா - ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
- இஞ்சி- சிறிய துண்டு
- பூண்டு - 5 பல்
- புளி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, புளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
வதக்கியவற்றை ஆறவைத்து சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி..