பப்ஜி பிரியர்களுக்கு ஹோப்பி நியூஸ்- புதிய பெயரில் இந்தியாவுக்கும் மீண்டும் வருகிறதாம்!
இந்தியாவில், சீனாவில் பல ஆப்ஸ்கள் தடைசெய்யப்பட்ட நிலையில், பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது.
இதையடுத்து, மாற்றாக பல கேம்கள் வந்தாலும் பப்ஜி பிரியகள் இந்தியாவுக்கும் எப்பொழுது வரும் என்றே காத்திருந்தனர்.
இந்நிலையில், கிராப்டான் இன்க் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் எனும் புது கேம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.
மேலும், இந்த கேம் பிரத்யேக இன்-கேம் ஈவென்ட்களான அவுட்பிட்களை கொண்டிருக்கும். இத்துடன் டோர்னமென்ட் மற்றும் லீக் என பல சுற்றுக்களை கொண்டிருக்கும். புது கேம் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா பப்ஜி மொபைல் கேமின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
புது கேம் வெளியீட்டிற்கு முன் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா முன்பதிவு நடைபறும் என கிராப்டான் இன்க் தெரிவித்து இருக்கிறது.