பப்ஜி மதன் விவகாரம்.. விசாரணையில் அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தளமான பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிவந்த 'பப்ஜி மதன்' கைது செய்யப்பட்டு தீவிர விசாரணையில் உள்ளார்.
மேலும், இவரிடம் 3 சொகுசு கார்கள், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 பங்களாக்களை மதன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு தவிர மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய் பணமும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை யூடியூப்பில் நேரலை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த பணத்தில் மதன் OP சல்லி பைசா கூட வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, பல இலட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் வாங்கி குவித்துள்ள மதன், வருமானத்தை மறைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஊழல் குறித்து வரித்துறையினருக்கு தகவல் அளிக்க உள்ள நிலையில், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் குறைந்த தொகையாக இருந்தாலும் கூட புகாரளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்காக dcpccb1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளது.