ஆபாச பேச்சு பப்ஜி மதன் வழக்கு... 1600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்! அதிரடி திருப்பம்
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவிலும், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் புகார்கள் குவிந்தன.
இதன்பின்னர், தலைமறைவான மதனை பிடித்து, கடந்த ஜூன் 18 ஆம் தேதி தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர், ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை முழுமையாக முடிவடையவில்லை, பலர் நபர்களிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளதால் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பின்னர்,. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து பப்ஜி மதன், மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்தனர்.
பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை. 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150-க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.