சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் இணையம்
இன்றைய நவீன யுகத்தில் இணையதளத்தை தவிர்த்து வாழ்க்கை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
முன்னைய காலங்களில் சிறுவர்கள் சூழலில் கிடைகின்ற பொருட்களை கொண்டு விளையாடினர்கள், இன்றைய சிறுவர்கள் இணைய தளத்தில் இருந்து விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றர்கள்.
இவ்வாறான விளையாட்டுக்கள் சிறுவர்களை உளவியல் ரீதியாக பதிப்படைய செய்கின்றது.
சிறுவர்களுக்கு கல்வியில் நாட்டம் இல்லாமல் போவதற்கும், பல்வேறு குற்ற செயல்களுக்கும் வழிவகுக்கின்றது.
இணையதளத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுக்கள் மிகவும் அடிமை தனமான முறையில் வடிவமைக்கப்படுகின்றன.
உளநோயாளிகளாக காணப்படுகின்றனர்
ஒருமுறை இணையத்தில் விளையாட்டுக்களை விளையாடினால் அது அதனையே தொடர்ந்து விளையாட தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது, இதனால் பெரும்பாலும் சிறுவர்களே பாதிக்கப்படுகின்றர்கள்.
அதுமட்டுமன்றி ஏராளமான இளைஞர்களை இணையதளமானது ஆபாச படங்களுக்கு அடிமையாக்கியுள்ளது.
மேலும் சிறுவர்களினதும் இளைஞர்களினதும் வினைத்திறனை இணையம் வீழ்ச்சியடைய செய்கின்றது.
இணையத்தில் நேரத்தை வீணடிப்பது மிகவும் சுலபமானது. சிலர் இணையதளத்திற்கு அடிமையாகி உள நோயாளிகளாக காணப்படுகின்றனர்.
உலகில் 200 நாடுகள் இணைந்து ஆயிரக்கணக்கான கணனிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள பாரிய தரவும் தளமான இணையம் மனிதனின் அறிவை வளர்ப்பதற்காகவும் வேலையை இலகுபடுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று பல்வேறு ஏமாற்று வேலைகளுக்காகவும் பழிவாங்கும் செயல்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உலகில் எல்லா விடயங்களிலும் நன்மை தீமை என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போல். இதில் இணையம் ஒன்றும் விதிவிலக்கல்ல.
இணையத்தில் ஏராளமான நல்ல தகவல்கள் இருந்தாலும் அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தவறான தகவல்களும் இருக்கின்றன. எவரும் எதையும் பதிவு செய்யக்கூடிய, பதிவிறக்கம் செய்யக்கூடிய வசதி இதில் காணப்படுகின்றது.
பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது
மக்கள் இணையத்தில் தகவல்களை பகிர்ந்துக்கொள்வதன் மூலம் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் தவறாக உபயோகிக்கவும் மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்ளவும் மிக எளிது.
இதனால் அடையாள திருட்டு போன்ற குற்ற செயல்கள் இடம்பெறுகின்றன. மேலும் இளம் பிள்ளைகள் கையில் இலகுவில் கிடைக்கக்கூடிய ஆபாச படங்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுவாக பாதிக்கின்றன.
இன்று உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற பாலியல் வன்புணர்வுகளுக்கும் பாலியல் குற்ற செயல்களுக்கும் இதுவே பிரதான காரணமாக அமைகின்றது. மனித அறிவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இணையம் இன்று மனித குளத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளமை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
இணையதள பாவனையாளர்கள் அதன் நன்மை, தீமை குறித்து பூரண விழிப்புணர்வின்றி இணையத்தை பயன்படுத்துவது ஆபத்தானது. குறிப்பாக சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது அவர்களின் பெற்றோர்கள் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
எந்த விடயத்திலும் நன்மை, தீமை என்பது தவிர்க்க முடியாதது. பகுத்தறிவு படைத்த மனிதனே அதனை உணர்ந்து செய்ற்பட வேண்டும், இல்லையேல் நாமே நமக்கு எதிரியாவது உறுதி.