சருமத்தை சேதப்படுத்தும் சொரியாசிஸ் நோய்- யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
“சொரியாசிஸ்” நோய் தொற்று என்பது சருமத்தின் செல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது ஏற்படுகிறது.
வழக்கமாக சில வாரங்களில் உற்பத்தியாக வேண்டிய சரும செல்கள் சில நாட்களிலேயே அதிகமாக உற்பத்தியாகி சருமத்தில் குவிந்து விடுகிறது. அத்துடன் நிறுத்தாமல் விரைவில் உதிரவும் ஆரம்பிக்கிறது.
“பிளேக் சொரியாசிஸ்” எனப்படும் தொற்று வகையானது வழக்கமாக சருமத்தில் ஏற்படும் ஒரு சொரியாசிஸ் நோய் நிலையாகும். இதில் அதிவிரைவான செல் உற்பத்தி செதில் செதிலான, சற்று மேலெழும்பிய திட்டுக்களை சருமத்தில் ஏற்படுத்தும்.
சருமத்தில் இருந்து கழண்டு வரும் செதில்களை பிளேக் என அழைக்கிறார்கள். “ஆட்டோஇம்யூன் நோய்” எனப்படுவது, தனது நோய் எதிர்ப்பு திறனால் அதிகமாகத் தூண்டப்பட்டு ஆரோக்கியமான செல்களை தாக்கத் தொடங்கும் செயன்முறையாகும்.
சொரியாசிஸை பொறுத்த வரை இந்த செயல்முறை சருமத்தில் செதில்கள் உதிரவும், வீக்கம் ஏற்பட காரணமாக அமைகிறது.
அந்த வகையில், சொரியாசிஸ் நோய் தொற்றின் முழு விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.
சொரியாசிஸ் ஏற்பட என்ன காரணம்?
பரம்பரை மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு சொரியாசிஸ் இருக்குமாயின் அது அவர்களின் பிள்ளைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மனஅழுத்தம், நோய்த்தொற்று, காயங்கள், மருந்துகள் அல்லது வானிலை மாற்றங்கள் இப்படியான பல காரணங்களினால் இந்த நோய் ஏற்படுகின்றது. இதற்கான முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வடிவங்கள்
சொரியாசிஸ் பல வடிவங்கள் ஏற்படும். அதன் அறிகுறிகளை சரியாக தெரிந்து கொண்டால் மாத்திரமே நோய்க்கு சரியான சிகிச்சை பெறலாம்.
சொரியாசிஸால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொரியாசிஸுக்கு சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த நிலையை அலட்சியப்படுத்துதல் தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, சொரியாசிஸ் காலப்போக்கில் இதயம், கல்லீரல், இரத்த நாளங்கள் மற்றும் பல உள்ளுறுப்புகளில் பிரச்சனை கொடுக்கும்.
அறிகுறிகள்
1. சொரியாசிஸ் நோய் தொற்றுயுள்ளவர்களுக்கு அவர்களின் சருமத்தில் சிகப்பான வீங்கிய சரும திட்டுக்கள் காணப்படும். இது ஒரு வகையான சொரியாசிஸ் நோயாகும். இது போன்று உடலில் ஒரு சில இடங்களில் மாத்திரம் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
2. சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகப்பான செதில் செதிலான ப்ளேக்குகள் முகம், புருவங்கள், நெற்றி, தலைமுடி, மூக்கு மற்றும் உதடு ஆகிய இடங்களில் காணப்படும். சிலருக்கு உச்சந்தலையில் சொரியாசிஸ் இருக்கும். அது தற்காலிகமான முடி உதிர்வை ஏற்படுத்தும்.
3. சொரியாசிஸின் சிகப்பு படலங்கள் நாட்கள் செல்ல வெள்ளை நிற செதில்களாக உதிர ஆரம்பிக்கும். இவை சருமத்தில் மற்ற இடங்களுக்கும் பரவும்.
4. அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துவதால் சிலர் அதனை தேய்ப்பார்கள். இதனால் அவர்களின் சருமம் சிவத்தல், ரத்த கசிவு, காயம் ஏற்படல் போன்ற மோசமான விளைவுகளை சந்திக்கும்.
5. அதீத வறண்ட சருமத்தால் செதில் உதிர்வது அல்லது வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிவது சொரியாசிஸின் மற்றொரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.
6. உச்சந்தலையில் சொரியாசிஸ் தோல் நோய் உள்ளவர்களுக்கு தலையில் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு செதில்கள் உதிரும். இது பொடுகு அல்ல உங்களின் சருமம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். பொடுகினால் ஏற்படும் செதில்கள் வெள்ளையாக அல்லது மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாக இருக்கும். ஆனால் இவை பொடுகு போல் அல்லாமல் செதில்கள் போல் இருக்கும்.
7.சொரியாசிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சருமத்தில் நமைச்சல் இருக்கும். இது ஒரு கூர்மையான வலி போன்ற உணர்வை ஏற்படுத்தி உங்களை சொரிய வைக்கும்.
8. நகத்தில் கூட சொரியாசிஸ் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. அவர்களின் நகங்களில் குழி விழுந்த தளர்வான, கடினமான நகங்கள் அல்லது சொறசொறப்பான நிறம் மாறியது போன்று காணப்படும். இன்னும் சிலருக்கு பிளவு ஏற்பட்டு நகம் உடைய ஆரம்பிக்கும்.
9. சிறிய, துளிகள் போன்ற வடிவில் சிகப்பு புள்ளிகள் அல்லது செதில்கள் கைகளில், கால்களில், தொடைகளில் அல்லது உச்சந்தலையில் காணப்படுவதால் அது உங்களின் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இந்த நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.
10. சிவந்த வீக்கமான திட்டுக்கள், சிறிய சீழ் நிரம்பிய கொப்புளங்கள் தோன்றும். இதனை பஸ்டுலர் சொரியாசிஸ் என அழைக்கிறார்கள். இது மிகுந்த வலியை ஏற்படுத்தும். இது உடலில் எந்த பகுதியை வேண்டும் என்றாலும் பாதிக்கலாம்.
11. பஸ்டுலர் சொரியாசிஸில் 3 வகைகள் உள்ளன. அதில், ஜம்பஸ்ச் பஸ்டுலர் சொரியாசிஸ் என அழைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது, இதன் விளைவாக காய்ச்சல், குளிர், சோர்வு, அதீத நமைச்சல், விரைவாக சீழ் பிடிப்பது, பசியின்மை, தசைகளில் பலவீனம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
12. “இன்வெர்ஸ் சொரியாசிஸ்” எனப்படும் சொரியாசிஸ் வகையானது புட்டம், மார்பகம், அக்குள் போன்ற இடங்களில் அதிகமாக ஏற்படும். வியர்வையும், சொறிவதும் இந்த நோயை இன்னும் அதிகமாக்கும்.
13. “எரித்ரோடெர்மிக் சொரியாசிஸ்” நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் சிகப்பு நிற தடுப்புக்கள் காணப்படும். இது எரிச்சலை ஏற்படுத்தும். சிலருக்கு உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தும்.
14. சொரியாசிஸின் இதர அறிகுறிகள் தவிர உடல் வெப்பநிலையில் ஏற்ற இறக்கம், அதிகரித்த இதயத்துடிப்பு, கணுக்காலை சுற்றிலும் வீக்கம் போன்றவைகளையும் அவதானிக்கலாம்.
சிகிச்சை
1. சொரியாசிஸ் சிகிச்சையானது சரும செல்கள் வளர்வதை நிறுத்துவதிலும், தோலில் உள்ள செதில்களை அகற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சிகிச்சை விருப்பம் சொரியாசிஸ் நோயின் தீவிரத்தை சார்ந்துள்ளது.
2. கார்டிகோஸ்டீராய்டுகள் மருந்துகள் முதல் மிதமான தடிப்புத் தோல் அழற்சி நோய்க்கு சிகிச்சையளிக்கும். இந்த மருந்துகளை பயன்படுத்தலாம். கார்டிகோஸ்டீராய்டுகள் களிம்புகள், லோஷன்கள், கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், ஜெல்கள், நுரைகள் மற்றும் ஷாம்புகள் போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன. லேசான தடிப்புத் தோல் அழற்சி களிம்புகள் தோல் மடிப்புகள், முகம் மற்றும் பெரிய திட்டுகள் போன்ற உணர்திறன் பகுதிகளுக்குப் பயன்படுத்தலாம். மேற்பூச்சு கார்டிகோஸ்டீராய்டுகளை எரியும் போது பயன்படுத்தலாம்.
3. வைட்டமின் D ஒப்புமைகள் வைட்டமின் D இன் செயற்கை வடிவம், கால்சிபோட்ரைன் மற்றும் கால்சிட்ரியால் தோல் செல் வளர்ச்சியை குறைக்கும். அறிகுறிகள் இருந்தால் இந்த மருந்து வில்லைகளை எடுத்து கொள்ளலாம்.
4. “ரெட்டினாய்டுகள்” வைட்டமின் ஏ இன் செயற்கை வடிவமாக பார்க்கப்படுகிறது. தடிப்பு மற்றும் அழற்சியை கட்டுபடுத்தும். ரெட்டினாய்டு டாசரோடீன் (Tazarotene )என அழைக்கப்படும் மாத்திரைகளை தாய்பால் கொடுப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |