அடுக்கடுக்காக வந்த வன்கொடுமை புகார்கள்... பொலிசாரிடம் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர்
சென்னை தனியார் பள்ளி ஆசிரியரின் வன்கொடுமை செயலை பல மாணவர்கள் வெளிப்படையாக கூறிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியின் மாணவர்கள் பலர் அப்பள்ளியில் பணிபுரியும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்களை முன் வைத்துள்ளனர்.
பிரபல நடிகரின் பள்ளியில் வன்கொடுமை செயலா? அடுக்கடுக்காக அவிழும் ஆசிரியரின் உண்மைகள்
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி ட்ரஸ்சியாக உள்ள இந்த பள்ளி ஆசிரியர் மீதான புகார் பூதாகாரமானதை அடுத்து பல அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என பலர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலனை பிடித்து சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் வைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பள்ளி முதல்வர் இந்திரா மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
