அவன வெட்டி போட்டுருவேன்! கொந்தளித்த பிக்பாஸ் ஜுலி
தற்போதுள்ள டீனேஜ் பெண்கள் எல்லாம் குழந்தைகள் இல்லை. அவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் அடல்ட் படம் பார்ப்பவர்கள் என பாஜக நிர்வாகி நாராயணன் சுந்தரம் ட்வீட் செய்ததை பார்த்து பிரபலங்கள் பலரும் தங்களது அதிர்ச்சியினை வெளியிட்டுள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் இருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வேலை செய்யும் ராஜகோபாலன் எனும் ஆசிரியர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் வன்கொடுமை செயலலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கும் நிலையில் பொலிசா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே குறித்த பள்ளியை நானோ என்னுடைய மகள் மதுவந்தியோ நடத்தவில்லை நாங்கள் ட்ரஸ்டி தான் என்று ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பள்ளி விவகாரம் தொடர்பாக மதுவந்தி அளித்த விளக்கம் குறித்த வீடியோ ட்வீட்டை பார்த்த பாஜக நிர்வாகி நாராயணன் சுந்தரம் கூறுகையில், தயவு செய்து ராஜகோபாலன் மீதான நடவடிக்கையை நிறுத்தவும்.
தற்போதுள்ள டீனேஜ் பெண்கள் எல்லாம் குழந்தைகள் இல்லை. அவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் அடல்ட் படங்களை பார்க்கிறார்கள். அதனால் உண்மையை கண்டுபிடிக்கவும். ஆதாரம் இல்லாமல் ராஜா சார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றார்.
நாராயணனின் ட்வீட்டை பார்த்த தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத்தோ, இது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டுள்ளார்.
This is Shocking. pic.twitter.com/kYfgujLPgi
— Aditi Ravindranath (@aditi1231) May 25, 2021
நாராயணன் சுந்தரம் டுவிட்டைப் பார்த்த பிக்பாஸ் ஜுலி, நீ எல்லாம் நிஜமாவே மனுஷ ஜென்மம் தானா? உன் சொந்த பெண்ண பண்ணுனா சும்மா இருப்பியா? இதுல அந்த கேவலமான பிறவிக்கு சார் பட்டம் வேற.... டேய் அவன் என் கையில கிடைச்சாலே வெட்டி போட்டுருவேன்.. என்று கூறியுள்ளார்.
