PSBB பள்ளியில் மதுவந்தியின் மகனே படிக்கவில்லையா? உண்மையை உடைத்த நெட்டிசன்கள்
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வன்கொடுமை செய்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் தற்போது கைது செய்ப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள வேறு சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதே போன்ற புகார்கள் எழுந்து வருகின்றது.
இப்புகார்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் குற்றம் செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்றும் அதற்காக ஒட்டுமொத்த பள்ளியை குறை சொல்லக் கூடாது என்றும் கூறி இருந்தார்.
மேலும் இது தனது தந்தையோ அல்லது தானோ நடத்தும் பள்ளி அல்ல என்றும் தனது தந்தை இந்த பள்ளியின் டிரஸ்டி மட்டுமே என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து பெருமையுடன் கூறும் மதுவந்தியின் மகனே அப்பள்ளியில் படிக்கவில்லை என நெட்டிசன்கள் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளனர்.
மதுவந்தியின் மகன் ஊட்டியில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் படிப்பதாக அப்பதியில் கூறப்பட்டுள்ளது. தற்போது அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
