பூமியை பாதுகாக்கும் மூன்றாவது சக்தி என்னனு தெரியுமா? மிரள வைக்கும் உண்மை
இதுவரை, நமது கிரகம் இரண்டு தனித்துவமான ஆற்றல் புலங்களை உருவாக்குவதாக அறியப்பட்டு வந்தது. முதலாவது புவி ஈர்ப்பு புலம் இரண்டாவது புலம் காந்தப் புலம் என்பதாகும்.புவி ஈர்ப்பு புலம் நமது வளிமண்டலத்தை பூமியுடன் கெட்டியாக பிடித்து வைத்துள்ளது.
போதுமான புவியீர்ப்பு விசை இல்லை என்றால், வளிமண்டலம் பூமியை விட்டு வெளியேறிவிடும். காந்தப் புலம் நமது கிரகத்தை சூரியக் காற்றிலிருந்து பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது.
இதையடுத்து தற்போது மூன்றாவதாக நமது பூமியை பாதுகாக்கும் சக்தியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
புவி மூன்றாம் சக்தி
தற்போத விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின்படி புவியை மூன்றாவதாக பாதுகாத்துக்கொண்டு இருப்பது ஆம்பிபோலார்’ என்கின்றனர்.ஆம்பிபோலார் புலம், புவியீர்ப்பு விசைக்கு எதிர் செயல்பாட்டைக் கொண்டிருப்பதால், துகள்களை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது.
இது புவி ஈர்ப்பு மற்றும் காந்தப் புலங்களைப் போலவே இன்றியமையாதது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.இந்த புலமானது நமது கிரகத்தின் வளிமண்டலத்தை பூமியின் வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு மேலே உள்ள விண்வெளிக்குள் நுழையச் செய்யும் என கூறப்படுகின்றது.
இந்த சக்தி மனித கண்களுக்கு தென்படாத சக்தியாக இருக்கிறது.துருவக் காற்றில் மிகவும் பரவலாக காணப்படும் துகள்களான ஹைட்ரஜன் அயனிகள், புவியீர்ப்பு விசையை விட 10.6 மடங்கு வலிமையான வெளிப்புற விசையை இந்த ஆம்பிபோலார் புலத்திலிருந்து எதிர்கொள்கின்றன.
புவியீர்ப்பு விசையை எதிராக செயல்பட அந்த ஹைட்ரஜன் துகள்கள் இது போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆம்பிபோலார் புலம், மேல் வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனோஸ்பியரை வடிவமைக்கிறது.
"இது ஒரு கன்வேயர் பெல்ட் போன்றது, இது இந்த வளிமண்டலத்தை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது" என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்த புலம் "அம்பிபோலார்” (இருமுனைப் புலம்), ஏனெனில் அது இரு திசைகளிலும் செயல்படுகிறது.
அயனிகள் எலக்ட்ரான்களை கீழ் நோக்கித் தள்ளி புவி ஈர்ப்பு விசைக்கு உட்படுத்துகின்றன. இந்த நேரத்தில் விண்வெளியை நோக்கிச் செல்ல முயற்சிக்கும் எலக்ட்ரான்கள், அயனிகளை மேல் நோக்கி தள்ளுகின்றன.
இது நமது மேல் வளிமண்டலத்தில் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை அவற்றின் இயல்பை விட அதிக உயரத்திற்கு தள்ளுகிறது.இப்படி பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்னும் பல விஷயங்களை இது தெரிந்துகொள்ள முடியும் என்பது உண்மை.இது தொடர்பான தேடலை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |