தாயக மக்கள் ஏன் சிசேரியன் சந்திரசிகிச்சை செய்துக் கொள்வதில்லை: இதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா?
பெண்களுக்கு மகப்பேறு என்பது மறுப்பிறப்பு என்று சொல்வார்கள். அப்படி இருத்தும் பெண்கள் அதனை வலியோடு சுகமாக ஏற்றுக் கொள்கின்றார்.
முந்தையக் காலத்தில் சுகப்பிரசவத்தின் மூலம் தான் குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்று பிரசவம் என்றால் இன்றையக் காலக்கட்டத்தில் சிசேரியன் அறுவை சிகிச்கை தான் பிரபலமடைந்து இருக்கிறது.
பிரசவத்தின் போது சில சிக்கல்நிலைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
சுகப்பிரசவத்தை ஒப்பிடும் போது சிசேரியன் சிகிச்சை பிரசவ முறையால் சில மோசமான உடல் உபாதைகளும் பிரச்சினைகளும் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக்கூடும்.
இந்தப் பிரசவத்தை மேற்கொண்ட பெண்கள் வழமையான உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ள கொஞ்ச காலம் போகும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பிரசவித்தவர்களுக்கு அதிகமாக முதுகு வலி, நோய்த் தொற்று, உடல்எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல உபாதைகள் ஏற்படும்.
அதனால் இவ்வகை பிரசவம் பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மேலும், இந்த சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அதற்கு ஆர்வம் காட்டி வரும் மக்கள் பற்றியும் முழுவதுமாக விளக்குகிறார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சி.சிஜேதரா.
உங்களுக்குத் தேவையான பதிவுகளை இன்னும் மேலதிகமாக தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை முழுவதுமாக காணுங்கள்