சாணக்கிய நீதி: கோடிகளில் பணம் சம்பாதிக்கணுமா? அப்போ இதையெல்லாம் கடைப்பிடிங்க
சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நாம் வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்லவும் இளமையிலேயே கோடிகளில் பணம் சம்பாதிக்கவும் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பணம் சம்பாதிக்க சாணக்கியரின் அறிவுரை
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால் முதலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் அதிகாலையில் எழுவது பல்வேறு வகையிலும் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள் வாழ்வில் வெற்றிகளை குவிப்பதுடன் விரைவில் முன்னேற்றம் அடைவார்கள் என சாணக்கியர் உறுதியாக கூறியுள்ளார்.
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், வாழ்வில் அதிக நேர்மறையான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். இப்படியானவர்கள் இளமையிலேயே அதிக பணத்தை சம்பாதிப்பார்கள்.
காலையில் சூரிய வழிபாடு செய்யும் பழக்கம் இருப்பவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்கின்றார் சாணக்கியர்.
அதனை செய்வதால் பிரபஞ்சத்தின் ஆற்றலுடன் நெறுங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. அதன் பின்னர் வாழ்வில் ஆசைப்படும் அனைத்து விடயங்களும் நிறைவேற ஆரம்பிக்கும்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒருவர் தனது வாழ்வில் உடல் ஆரோக்கியத்துக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றானோ அவ்வளவுக்கு வாழ்வில் அதிக வெற்றிகளையும் பணத்தையும் அடைய முடியும்.
சாணக்கியரின் கருத்துப்படி பணத்தைப் பயன்படுத்தும் விதம் தான் ஒருவரை விரைவில் பணக்காரராகவும் அதே சமயம் ஏழையாகவும் மாற்றுகின்றது.
கையில் கிடைக்கும் பணத்தை சரியாக பயன்படுத்துபவர்கள், சரியான நிதி முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள் விரையில் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறுகின்றார்கள்.
பணத்தை சரியாக உபயோகிக்கவும், சேமிக்கவும் சரியான துறையில் முதலீடு செய்து இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் கலையும் அறிந்தர்கள் இளம் வயதிலேயே செல்வந்தர்களாக மாறுவார்கள்.
இந்த பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால் யார் வேண்டுமானாலும் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்கின்றார் சாணக்கியர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |