சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா இல்லை... அவருக்கு பதில் இவர் தான்!
விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் இந்த வாரம் தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளர் VJ பிரியங்கா சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
குறிப்பாக சூப்பர்சிங்கர் பற்றி பேச்சு எடுத்தாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான். இவர்களின் தனித்துவமான பாணிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ஜீனியர் மற்றும் சீனியர் என இரண்டு வகைகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கும். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ரசிகர்களால் ரசித்து பார்க்கும் மா கா பா - பிரியங்கா ஜோடி இந்த வாரம் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை.
பிரியங்காவின் திருமணம் அண்டையில் நடந்துள்ள நிலையில் அவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முடியாத காரணத்தால், அவருக்கு பதில் இந்த வாரம் மா கா பா உடன் இணைந்து மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா நிகழ்சியை தொகுத்து வழங்கவுள்ளார். குறித்த விடயத்தை விஜய் தொலைக்காட்சி Promo வீடியோவுடன் அறிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |