நீரிழிவு நோயாளிகளே இயற்கையாகவே இன்சுலின் சுரக்க வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்கே
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் நீரிழிவு நோயினால் பல உணவுப்பொருட்களை சாப்பிடலாமா என்ற சந்தேகமே அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும்.
உனவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
நீங்கள் சாப்பிடும் உணவு உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் தரும் வகையில் சர்க்கரையாய் மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது.
இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத் தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது.
இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவைதான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் உணவு குறித்து இங்கு தெரிந்து கொள்வோாம்
பாகற்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பாகற்காய் இருந்து வரும் நிலையில், இவை கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்தி வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
இலவங்கப்பட்டை: நமது கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே இலவங்கப்பட்டை செயல்படுகிறது. டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.
மஞ்சள்: அதிக அளவு குர்குமின் உள்ள மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இவை இன்சுலின் உற்பத்தி செல்கள் சேதமடைவதை தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
வெந்தயம்: நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவராக வெந்தயம் காணப்படுகின்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சரியான அளவில் கொண்டுவதில் வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் உதவுகின்றது.
வெண்டைக்காய்: வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவில் ஒன்றான வெண்டக்காயும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |