நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? குழப்பத்தை தீர்க்கும் ஒரே பதில்
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் நீரிழிவு நோயினால் பல உணவுப்பொருட்களை சாப்பிடலாமா என்ற சந்தேகமே அதிகமாக உள்ளது. அதிலும் நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் அறிவுரையின் படியே உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உணவுகளில் அதிக கட்டுப்பாடும் அவசியம்.
குறிப்பாக வெள்ளை சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி, சாதாரண நபர்களும் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் நீரிழிவு நோயாளிகளின் உடல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுமாம்.
மருத்துவ குணங்களை அள்ளித்தரும் தேனை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
தேனில் கிட்டத்தட்ட 300 வகைகள் உள்ள நிலையில், ஒரு டீஸ்பூன் தேனில் 60 கலோரிகள் மற்றும் 17 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
மேலும் இதில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது.
தேனில் உள்ள அதிகமான அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வெள்ளை சர்க்கரையில் ஒரு டீஸ்பூனில் 13 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனில், வெள்ளை சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது சர்க்கரைக்கு மாற்றாக தேன் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரையுடன் சேர்த்து கூடுதலாக தேன் சாப்பிடக்கூடாது.
முடிந்த வரை தேன் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. அவ்வாறு குறைவாக எடுக்கும் போது அவை கொம்புத் தேன் என்பதை உறுதி படுத்திக் கொள்ளவும்.
ஏனெனில் கடைகளில் விற்கப்படும் தேனில் அதிகளவு கெமிக்கல் கலந்துள்ளதால் உடம்பிற்கு பல தீமைகளை கொண்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |