இந்த சுவையான உணவு நீரிழிவு நோயாளியை கோமாவுக்கே கொண்டு போயிடும்? ஜாக்கிரதை... அலட்சியம் வேண்டாம்!
சில உணவுகள் உங்கள் ஆயுளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், ஒரு தவறு உங்கள் எல்லா முயற்சிகளையும் குழப்பிவிடும்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சிப்ஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட ரொட்டிகள், மிட்டாய்கள் போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை.
பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கைகள், பாதுகாப்பு பொருட்கள், அதிகப்படியான உப்பு, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை ஆகியவை உள்ளன.
இவை நேரடியாக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.

எப்படி பாதிக்கிறது?
ஆய்வின்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீரிழிவு, இருதய நோய்கள், நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய், நரம்பியல் பிரச்சினைகள் டிமென்ஷியா, பார்கின்சன் போன்ற கோளாறுகளுடன் தொடர்புடையது மற்றும் இவற்றால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட்டால் கோமாவுக்கே செல்ல நேரிடும்.

அதிக சர்க்கரை, உப்பு
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக சக்கரை மற்றும் உப்புகள் சுவைக்காக சேர்க்கப்படுகின்றது.
இது இறப்பு அபாயத்தை அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம்.
குறிப்பாக நீரிழிவு, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்வது நீண்ட காலத்திற்கு இருதய ஆரோக்கியத்தைப் பாதித்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே, ஆயுட்காலம் அதிகரிக்க புதிய மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பருவகால மற்றும் பதப்படுத்தப்படாத உணவை உண்பது சிறந்தது.