மறந்தும் கூட சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!
இன்றைய காலத்தில் பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய்.
உடற்பயிற்சி இல்லாதது, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மசாலா உணவுகளை அதிகம் உட்கொள்வது மற்றும் குளிர்பானங்கள், உடல்பருமன் போன்ற காரணங்கள் சர்க்கரை வியாதிக்கு காரணமாகின்றன.
அத்துடன் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியில் திடீர் மாற்றம் எற்பட்டு, அது சுரக்காமல் போவதாலும் சர்க்கரை வியாதி வருகின்றது.
எனவே தொடக்கத்திலேயே சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது நல்லது, அந்நேரத்தில் ஒரு சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியம்.
துரித உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு எந்த விதமான நோய்களும் வராமல் இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உண்ண முயற்சி செய்யுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் உள்ளது, இதன் காரணமாக அதன் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளது. இதனுடன், இதில் கார்போஹைட்ரேட் அளவும் அதிகமாக உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.
நோயாளிகள் சில காய்கறிகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சில காய்கறிகளில் மாவுச்சத்து உள்ளது. உதாரணமாக, சோளத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காய்கறிகளில் பீட்ரூட், திராட்சை, சர்க்கரை, ஜாம், பிஸ்கட், சாக்லெட், கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், கேக், முந்திரி, க்ரீம் வகை உணவுகள், கொழுப்பு நிறைந்த மசாலா உணவுகள், ப்ரிஸ்ர்வெட்டிவ் கலந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம்.