உங்க குழந்தைகள் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி இருக்காங்களா? அப்போ இந்த நோய் இருக்குமாம்!
பொதுவாக நமது வீட்டிலுள்ள குழந்தைகள் அதிகமான ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவார்கள். இது தொடர்பாக நாம் கேக்கும் போது அவர்களின் முகத்தை பார்த்தால் சிவந்து காணப்படும்.
அந்தளவு ஸ்மார்ட் போனின் தாக்கம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு தடுப்பது இதற்கு என்ன செய்யலாம் என பல பெற்றோர்கள் சிந்தித்து இருப்பார்கள்.
அந்த வகையில் ஸ்மார்ட் போனினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் போனினால் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
1. சிறார் மிக நீண்ட நேரம் குனிந்து ஸ்மார்ட் போனை பார்ப்பதால் அவர்களின் முதுகு பகுதி, இடுப்பு பகுதி அதிகமாக வலிக்க ஆரம்பிக்கும்.
2. முந்தண்டு லேசாக வலைந்து காணப்படும்.
3. 14 வயது தொடக்கம் 18 வரையிலான குழந்தைகள் தான் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதாக பிரேசில் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சமூக சீரழிவு பிரச்சினைகள் வரக்கூடும்.
4. குழந்தைகள் இருட்டில் வைத்து ஸ்மார்ட் போனை பாவிப்பதால் காலப்போக்கில் அவர்களின் கண் பார்வை குறைவடைகிறது. 5. தேவையற்ற பல விடயங்களை வயது எல்லை இல்லாமல் தெரிந்து கொள்கிறார்கள்.
6. அவர்கள் சிந்திக்க வேண்டிய வயதில் அதிகமான ஸ்மார்ட் போனின் தாக்கம் இருந்தால்
நாளடைவில் அவர்களின் மூளை வளர்ச்சி குறைவடையும்.