பன்னீர் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும்?
பால் பொருட்களில் பன்னீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனால் பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் உடல் எபாதைகள் வரும்.

பன்னீர்
பன்னீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கிறது. இது தவிர பன்னீரின் சவையை விரும்புவர்கள் ஏராளம்.
பொதுவாக சைவ பிரியர்களிடையே பன்னீர் அதிகமாக சாப்பிடப்படுகின்றது. இது சைவப்பிரியர்களுக்கு மட்டுமல்ல அசைவ பிரியர்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு.

ஆனால் அதிகப்படியாக பனீரை உணவாக சாப்பிடும்போது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. இது அதிர்ச்சி தரும் ஒரு செய்தியாக இருப்பினும் எல்லா விடயத்திலும் நல்லது ஒன்று இருந்தால் கட்டாயம் கெட்டவையும் இருக்கும்.
இது போல தான் பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு பிரச்சனைகளை கொண்டு வரும்.
100 கிராம் அளவு பனீரில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த விகிதத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம். கால்சியம்: 714 மி.கி புரதம்: 19.1 கிராம் கார்போஹைட்ரேட்: 14.7 கிராம் கலோரிகள்: 265 மெக்னீசியம்: 8 மி.கி சோடியம்: 18 மி.கி போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இதன்படி தீமையை அறிந்து கொண்ணலாம்.

தீமைகள்
பனீர் மட்டுமின்றி எந்த ஒரு உணவையும் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
- பனீரை அதிகமாக சாப்பிடும்போது புரதமானது நீண்ட நேரம் வயிற்றில் தங்கியிருப்பதாலும், அதிக புரதத்தை நாம் சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பு ஏற்படலாம்.
- இதனால் குமட்டல், அடிவயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும்” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- அதிக பன்னீர் சாப்பிடும்போது வயிறு உப்புசம், அஜீரணம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.
- பன்னீரில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. இதை அதிகமாக சாப்பிடும் போது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உயரும். இது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை அதிகரிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |