Ethirneechal: திரும்பி வந்த பார்கவியால் கோபப்பட்ட ஜீவானந்தம் - கண்ணீர் விட்ட ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி கனடா செல்லாமல் திரும்ப வந்ததற்கு ஜீவானந்தம் கோபபட்டு வெளியெ செல்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது. குணசேகரனை சிறையில் போட்டு கூட புத்தி வரவில்லை.
மிண்டும் அதே போல செய்த தவறை தான் செய்து கொண்டு இருக்கிறார். தன் மகன் தர்ஷனை அவன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்தே ஆக வெண்டும் என பிடிவாதத்துடன் இருக்கிறார்.
இதில் தர்ஷனுக்காக குணசேகரனிடம் பேச சென்ற ஈஸ்வரியை அடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ஈஸ்வரிக்கு நியாயம் கிடைப்பதற்கு ஜனனி மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜீவானந்தம் மூலம் கனடா செல்ல இருந்த பார்கவி ஈஸ்வரியை பார்க்க யாருக்கும் தெரியாமல் விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்துள்ளார்.
இதை பார்த்த ஜீவானந்தம் நீ இங்க என்ன பன்ற அப்படி கோபமாக கேட்டு விட்டு வெளியே செல்கிறார்.
பார்கவி ஈஸ்வரியின் கையை பிடித்ததும் ஈஸ்வரி கண்ணீர் விட்டு அழும் காட்சி மனம் கவர்ந்துள்ளது. இதன் பின்னர் கதைக்களம் எப்படி தொடர போகிறது என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |