பிரியங்காவை கலாய்த்துவிட்டு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்...பொறாமையில் பொங்கிய மா.கா. பா!
கலாய்த்த நடிகர் கமலின் அருகில் சென்று அவருடன் அமர்ந்த பிரியங்கவின் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் பிரியங்கா.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.

அப்போது, பிரியங்கா மேடையில் இருந்த நடிகர் கமலிடம் சென்று அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதன் போது, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அம்மா... ஹாய்... என்று கூச்சல் போடுகிறார்.
அப்போது மா.க.பா கலைக்க, என்னிடம் ஏற்கெனவே, கமல் சாரும்.. நானும் அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்று உள்ளது.
இப்போது மறுபடியும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறி கமல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.