திருமணத்திற்கு பின் கணவருடன் முதல் selfie... பிரியங்கா தேஷ்பாண்டே நெகிழ்ச்சி
பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட முதல் செல்பியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே
தமிழ் நாட்டில், எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரே ஸ்டார் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர். அப்படி, நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் கடந்த வாரம் வசி சாச்சி என்பவரை திடீர் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப், மதுமிதா, அசார் ஆகிய விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
வசி சாச்சி, டிஜே-வாக இருக்கிறார். திருமண நிகழ்வுகள், சினிமா நிகழ்வுகள், மக்கள் அதிகம் கூடும் டிஸ்கோ க்ளப் உள்ளிட்ட இடங்களில் இவர் டிஜேவாக செயல்படுகிறார்.
சமகாலத்தில் இவர்களின் திருமண புகைப்படங்களும் இவர்களை பற்றிய செய்திகளும் இணையத்தில் வலம்வந்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்துக்கு பின் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட முதல் செல்பியை தற்போது வெளியிட்டு Making memories என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
