பாட்டி சேலையிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே! குவியும் லைக்குகள்
நடிகை பூஜா ஹெக்டே தனது பாட்டியின் 70 ஆண்டு பழைய காஞ்சிபுரம் பட்டு சேலையை அணிந்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பூஜா ஹெக்டே
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே.
இவர் தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ராசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்னை பெற்றார்.
ஆனால் அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தெலங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வகையில் இருந்தது.இந்த பாடலின் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார்.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சூர்யாவோடு, ரெட்ரோ படம். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான கூலி படத்தில் ஒரு நடனத்தில் பங்கேற்பதுடன், கேமியோ கதாபாத்திரமாகவும் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தங்களிலும் ஆர்வம் காட்டிவரும் இவர், தற்போது தனது பாட்டியின் 70 ஆண்டு பழைய காஞ்சிபுரம் பட்டு சேலையை அணிந்து குடும்ப பாங்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |