கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது கணவர் வசி சாச்சியுடன் mirror selfie எடுத்து அதனை Every time I look in to the mirror I say Thank you, God... என்ற பிரபல ஆங்கில பாடலுடன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்துக்க இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார். அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விடவும் இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார். தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளும் பெருமளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது பிரியங்கா தேஷ்பாண்டேவின் தனது கணவர் வசி சாச்சியுடன் எடுத்துக்கொண்ட mirror selfie இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.