மீண்டும் கல்லூரிக்கு சென்ற நடிகை ஸ்ருதிஹாசன்! அவரே வெளியிட்ட காணொளி
நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பையில் உள்ள St. Andrew's College-இல் தான் உளவியல் (Psychology) படித்தார். இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பின்னர் தனது காலேஜ் வீதியில் நடந்து சென்று தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல பாடகியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் இவர் சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.இவரின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்றால் மிகையாகாது.

தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், தனது திறமையாலும் யதார்த்தமாக நடிப்பாலும், தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறியிருக்கின்றார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

அதனை தொடர்ந்து தனுஷ் நடிபில் வெளியான 3, தளபதிக்கு ஜோடியாக புலி, தல அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் நடிப்பில் வெளியான 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இவர் பாடிய விண்வெளி நாயகா பாடல் பெரிய ஹிட் கொடுத்தது.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது காலேஜ் வீதியில் நடந்து சென்று பழைய நினைவுகளை பற்றி பேசியுள்ள நெகிழ்ச்சியான காணொளியை தனது இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |