மணப்பெண்ணாக மாஸ் என்ரீ கொடுத்த vj பிரியங்கா... யார் இந்த வசி?
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினி VJ பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே
சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று வரையில் மங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் இவரின் தனித்துவமான பாணி பலருக்கும் பிடித்துப்போன ஒன்று.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
வசி என்பவரை பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துக் கொண்ட தகவல்க் நேற்று இணையத்தில் அனல் பறந்த நிலையில், அவர் தொழிலதிபரா? சீரியல் தயாரிப்பாளரா? என இணையத்தில் ரசிகர்கள் தேடலை ஆரம்பித்தனர்.
ஆனால், அவர் ஒரு பிரபல டிஜே என்பது தற்போது தெரியவந்துள்ளது. டிஜே வசி சாச்சி என்பவரை தான் விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி பிரியங்கா நேற்று திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், இரண்டாவதாக தனது கழுத்தில் தாலி ஏறும் போது மணமேடையிலேயே பிரியங்கா கண் கலங்கிய காட்சிகளும், கணவர் வசி இனிமேல் நான் இருக்கேன் பார்த்துக்கிறேன் என முத்தம் கொடுத்த தருணமும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.இந்நிலையில் திருமணத்தில் பொண்ணு மாப்பிளையில் மாஸ் என்ரீ காணொளிகள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |