தெகிடி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க
நடிகை ஜனனியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜனனிக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஜனனி ஐயர்
தனது நீண்ட நாள் நண்பரான விமானி சாய் ரோஷன் ஷ்யாம் உடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நடிகை ஜனனி ஐயர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் ஜனனி ஐயர்.
அதனை தொடர்ந்து அசோக் செல்வனுக்கு ஜோடியாக ‘தெகிடி’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
அதனையடுத்து அதே கண்கள், பலூன் திரைப்படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனை தாண்டி கெளதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு 3 இடம் பிடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை ஜனனி, படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள் நண்பரான விமானி சாய் ரோஷன் ஷ்யாம் உடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |