ARR New Car: சொந்த பணத்தில் கார் வாங்கிய இசைப்புயல்- விலை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் புதிய கார் வாங்கியதாக பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர். ரகுமான்
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்கிறார்.
இவர், இசையில் வெளியான ரோஜா திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
கடந்த வருடம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்- மனைவி சாராவை பிரிவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தைகள் மூவரும் நன்கு வளர்ந்தவர்களாக மாறிய பின்னர் மனைவியைப் பிரிவதாக அறிவித்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர், சாரா தரப்பில் இருந்து வெளியான வக்கீல் நோட்டீஸ் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
புதிய காரின் விலை
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் புதிய காரில் வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில், மகேந்திரா e9 வகை காருடன் ஸ்டைலாக நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "எனக்குப் பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e. இந்த ஸ்டைலான இந்திய காருக்கான ஆடியோவை நாங்கள் வடிவமைத்தோம்" இந்த காரை தான் பணம் கொடுத்து தான் வாங்கினேன்..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர். ரகுமானின் பதிவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
ஏ.ஆர். ரகுமான் வாங்கியுள்ள இந்த எலக்ட்ரிக் கார் சுமார் ரூபாய் 22 லட்சத்தில் இருந்து ரூபாய் 31 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |