விரக்தியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பிரியங்கா சோப்ரா... 160 கோடி ரூபாய் வீட்டில் நடந்தது என்ன?
நடிகை பிரியங்கா சோப்ரா 160கோடி ரூபாய் மதிப்புள்ள தனது வீட்டிலிருந்து விரக்தியுடன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியக்கா சோப்ரா
தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, அடுத்தடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடிக்கும் இவர் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பிரியங்காவை விட 10 வயது சிறியவர் ஆவார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், இவர் கடைசியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமின்றி வேறு வகையிலும் இவர் வருமானத்தை குவித்து வருகின்றார். தனது இன்ஸ்டாகிராமில் ஏதேனும் பிராண்டின் விளம்பரம் போடுவதற்கு ஒரு போஸ்ட்க்கு மூன்று கோடி ரூபாய்வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
160 கோடி ரூபாயில் வீடு
அமெரிக்காவில் அவரும் நிக் ஜோனஸும் சேர்ந்து 160 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கடந்த 2019ம் ஆண்டு வாங்கினார்கள்.
இந்த விட்டில் 9 படுக்கையறைகள், 9 பாத்ரூம்கள், உடற்பயிற்சி கூடம், தியேட்டர், நீச்சல் குளம் என சகல வசதிகள் உள்ள நிலையில், இங்கு 4 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.
தற்போது பிரியங்கா சோப்ரா அந்த வீட்டிலிருந்து விரக்தியுடன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குறித்த வீட்டில் கட்டுமான பணிகள் முறையாக இல்லாததால் ஆங்காங்கே விரிசல்களும், நீர் கசிவும் ஏற்பட்டுள்ளதாம்.
இதனை கவனித்த பிரியங்கா சோப்ரா இனி இந்த வீட்டில் இருந்தால் உயிருக்கே ஆபத்து என்று கூறி வெளியேறிவிட்டதாகவும், வீட்டை தங்களுக்கு விற்ற கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றினையும் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |