மருமகளின் மேக்கப் பொருட்களை பயன்படுத்திய மாமியார்! நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்
உத்தர பிரதேசத்தில் மாமியார் தனது மேக்கப் சாதனங்களை பயன்படுத்தியதால் மருமகள் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேக்கப் சாதனத்தை பயன்படுத்திய மாமியார்
பொதுவாக தம்பதிகளின் பிரிவிற்கு கணவன் மனைவிக்கு இருக்கும் பிரச்சினை, மாமியார் மருமகள் பிரச்சினை என்று தான் கேள்விப்பட்டுவருகின்றோம்.
ஆனால் உத்தர பிரதேசத்தில் மிகவும் விசித்திரமான குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளார். ஆக்ரா பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை திருமணம் செய்துள்ளனர்.
மருமகளின் அனுமதி இல்லாமல் அவரது மேக்கப் பொருட்களை மாமியார் எடுத்து அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். பல நாட்கள் பொறுத்து பார்த்த மருமகள் கோபத்தில் மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார்.
இதனை தனது கணவருடன் குறித்த பெண் கூறுகையில், கணவர் அப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் மூத்த மருமகளின் தங்கையான இரண்டாவது மருமகளும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மருமகள்கள், தாய் பேச்சை கேட்டு நடக்கும் கணவர்களுடன் வாழ விருப்பம் இல்லை என்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஒரு மேக்கப் சாதனத்தை பயன்படுத்திய விவகாரம் இரு தம்பதிகள் விவாகரத்து செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |