பிரியங்காவின் முதல் குடும்ப வாரிசு எப்படி வளர்ந்துட்டாங்க? மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தனது குடும்ப முதல் வாரிசுடன் அமர்ந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டார். மேலும் இந்த சீசனில் இரண்டாவது இடத்தையும் தட்டிச் சென்றார்.
இதுவரை பிரியங்கா தனது கணவரை குறித்து எந்தவொரு விபரமும் வெளியிடாத நிலையில், அவ்வப்போது தனது மருமகளுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.

மருமகளுடன் பிரியங்கா
இவருக்கு ஒரு தம்பி இருக்கும் நிலையில், அவருக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது. இந்த குழந்தையுடன் பிரியங்கா பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அத்தையாக இருக்கும் பிரியங்கா தனது மருமகளை கீழே விடாமல் வைத்துக் கொண்டு தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார். சமீபத்தில் ஓணம் பண்டிகைக்கு தனது மருமகளை வரவேற்று பயங்கர அலப்பறை செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது மருமகளுடன் சேர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் கெத்தான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் மருமகள் நன்கு வளர்ந்துவிட்டாளே என்று கூறியதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
