ஒரே வாரத்தில் பிரியங்கா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி- முத்தம் கொடுத்து வாழ்த்திய கணவர்
தொகுப்பாளி பிரியங்காவின் திருமணம் நடந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், மற்றுமொரு நற்செய்தியை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா.
இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி பல பிரபலங்கள் தற்போது வெள்ளத்திரையில் பிரபலமாக இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவும் வெள்ளத்திரைக்கு செல்வார் என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். ஆனால் பிரியங்கா இதற்கு முன்னர் திலிப் குமார் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பதும் கூறப்பட வேண்டியது.
முதல் விஷேசம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா கணவருடன், தன்னுடைய 33ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் வரும் முதல் விஷேசம் என்பதால் குத்தாட்டம் போடுவது போன்று காணொளியொன்றையும் பகிர்ந்து தனக்கு தானே வாழ்த்து தெரிவிக்கிறார்.
அந்த காணொளியில் அவருடைய கணவர் வசியும் இருக்கிறார். இறுதியாக பிரியங்காவின் நெற்றியில் முத்தம் கொடுத்து முடிக்கிறார். அத்துடன் காணொளி முடிவடைகிறது.
இந்த காணொளியை பார்த்த பிரியங்கா ரசிகர்கள், பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |