காதலருடன் விரைவில் டும் டும்.. அந்த நாளுக்காக காத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்த வருடம் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கல்யாண முதல் காதல் வரை” என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் வெள்ளத்திரையில் கால்பதித்தார்.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், யானை, ஓ மணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு திருமணம்
இந்த நிலையில் திருமணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
அதாவது, பிரியா பவானி சங்கர் கடந்த சில ஆண்டுகளாக ராஜ்வேல் என்பவரைக் காதலித்து வருகிறார்.
இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
அந்த வகையில், கடைசியாக ஆஸ்திரேலியாவில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்டிருந்தனர். ஆனால் திருமணம் குறித்து எந்தவித பதிவும் இல்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், எதிர்வரும் 2025-ல் தன் காதலரைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |