கர்ப்பிணி மனைவியுடன் நெருக்கமாக அட்லீ! தெறிக்கவிடும் புகைப்படம் இதோ
இயக்குனர் அட்லி மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், தற்போது ஜோடியாக எடுத்திருக்கும் போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் அட்லி பிரியா தம்பதி
தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படமான தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி, பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரியா கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தற்போது பிரியா கர்ப்பமான நிலையில், போட்டோஷுட் எடுத்துள்ளனர். சமீப காலமாக கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் போட்டோஷுட் எடுப்பது வழக்கமாகி வரும் நிலையில், இவர்களின் புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் என ரசிகர்கள் குவித்து வருகின்றனர். தற்போது அட்லீ ஜவான் திரைப்படத்தினை இயக்கி வரும் நியைலில், இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன் என முன்னனி பிரபலங்கள் நடித்துள்ளனர்.