நீங்கள் சமைக்கும் குக்கரில் தண்ணீர் அதிகமாக கொட்டுகின்றதா? இதுதான் காரணம்
சமையலின் போது வீடுகளில் பயன்படுத்தப்படும் குக்கர் சமைக்கும் போது சில தருணங்களில் தண்ணீர் வெளியே கசியும். இதற்கு காரணம் என்ன? எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சமையல் குக்கர்
இன்று பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பிரஷர் குக்கரை தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவதால் மிகவும் சுலபமாக வேலைகள் முடிவடைகின்றது.
ஆனால் சில தருணங்களில் நாம் குக்கரில் சமையல் செய்யும் பொழுது, அதிலிருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறும். இதற்கு எவ்வாறு தீர்வு கொடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தண்ணீர் வெளியேறுவது ஏன்?
குக்கரை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் தண்ணீர் கசியும் பிரச்சினை எழும்.
மற்ற மாத்திரங்களைப் போன்று குக்கரை தேய்த்து கழுவுதல் கூடாது.
குக்கரில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
மிதமான தீயில் சமைக்கும்போது குக்கரில் இருக்கும் நீர் துளிகூட வெளியே எட்டி பார்க்காது.
எந்த உணவை சமைத்தாலும் ஒரு துளி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். மேலும் மூடியை சுற்றிலும் எண்ணெய் தடவிக்கொண்டால் தண்ணீர் கொட்டாது.
குக்கர் மூடியில் இருக்கும் ரப்பர் சில மாதங்களிலே தளர்வாகிவிடும். அவ்வாறு தளர்வாக இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரப்பரை சமைத்த உடன் குளிந்த நீரில் போடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது ஃப்ரீசரில் வைத்தாலும் தண்ணீர் வெளியே கசியாது.
விசில் அழுக்காகவும், உணவுப் பொருட்கள் சிக்கி இருக்கின்றதா என்பதையும் பார்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.