சக்கரை நோயை சட்டுன்னு குறைக்கணுமா? நாவல் விதை இருந்தா போாதும்
இன்றைய காலகட்டத்தில் சக்கரை நோயின் பாதிப்பு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதை தடுப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தாலும் இன்னும் இதன் பெருக்கம் குறைவது சாத்தியம் இல்லாததாக காணப்படுகின்றது.
எவ்வளவு மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலும் இயற்கையாக நோயை விரட்டுவதே சிறந்தது. அந்த வகையில் நாவல் மரத்தின் பழங்களும் விதைகளும் ஏன் ஒட்டுமொத்த பாகங்களும் பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
இதை நோயாளிகள் மற்றும் ரோய் எதிர்ப்பாக எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நவல் மரப்பாகம்
1. நாவல் மழத்தில் புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின் C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் காணப்படுகின்றது.
இந்த பழத்தை உண்பதால் ஞாபகசக்தி அதிகரிக்கிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
2. உடலில் இருக்கும் புதியரத்த உற்பத்தியை இது உற்பத்தி செய்கிறது. அனிமியா பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.
இந்த பழத்தில் அதிக கரோரிகள் இல்லாததால் எடை கட்டுபாட்டில் உள்ளவர்கள் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம். கெட்ட கொழுப்பை குறைக்ககூடிய சக்தி இந்த பழத்திற்கு உண்டு.
3.வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த நாவல் பழத்தின் இலைகளை இடித்து அதன் சாற்றை பிளிந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் பிரச்சனை கிட்டவே வராது.
இதை இடித்து பொடி செய்து பல் துலக்கினால் பற்களின் ஈறுகள் ஆரோக்கியமாக வரும்.
4.சக்கரை நோயாளிகள் இது வரைக்கும் தெரிந்திராத ஒரு வரப்பரசாதப் விதை தான் நாவல் பழத்தின் விதைகளாகும். இது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை செய்கிறது.
இது ஆய்வு ஒன்றின் மூலம் அறியப்படடதன்படி நாவல் விதைகளைபவுடராக உட்கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருக்கிறது என அறியப்படடுள்ளது.
5. மாதவிடாய் பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த நாவல் மரத்தின் பட்டைகளை பவுடராக்கி அவித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் இந்த பிரச்சனை இல்லாமல் செய்யலாம்.
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு மருத்துவ குணம் என்றே சொல்லலாம். நாவல் மரப்பட்டை, குரலின் இனிமையை அதிகரிக்க செய்யும்.
அத்துடன், ஆஸ்துமா, தாகம், களைப்பு போன்றவற்றுக்கும் அருமருந்தாகிறது. வாய் சுகாதாரம் பேணப்பட வேண்டுமானால், இந்த மரத்தின் பட்டைகளே பயன்படுத்தலாம். நாக்கு, வாய், தொண்டை புண்களுக்கும் இது தீர்வை தருகின்றன .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |