சவால்விட்டு களமிறங்கிய நடிகர் விஜயகாந்தின் மனைவி! கடைசியில் இந்த நிலையா?
தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சவால் விட்ட பிரேமலதா தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
ஏப்ரல் மாதம் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திய கட்சிகளில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் ஒன்றாகும்.
ஆளும் அதிமுக கட்சியுடன் கூட்டணியிலிருந்த தேமுதிக, கேட்கப்பட்ட தொகுதிகள் கிடைக்காததால், கோவமுற்றது. கொடுக்கப்பட்ட தொகுதிகளை ஏற்க மனமில்லாத தேமுதிக, கூட்டணியிலிருந்து வெளிவருவதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, எந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் மேலோங்கி இருந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் சேர்ந்தது தேமுதிக.
15 ஆண்டுகளுக்கு முன்பு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெற்றி பெற்ற கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தற்போது போட்டியிட்டதோடு, தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு, தேமுதிகாவின் கோட்டையாக விருத்தாச்சலத்தை மாற்றவிருப்பதாகவும் கூறினார்.
தற்போது விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். சமீபத்திய தகவல்களின் படி பிரேமலதா விஜகாந்த் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கட்சி தொண்டர்களுக்கிடையே பிரேமலதாவின் கடுமையான போக்கும், பிடிவாதமே இதற்கு காரணம் என்றும், இதனால் களப்பணியாளர்களால் முழுமையாக களப்பணி ஆற்றமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.