20 ஆண்டுகளுக்கு பின் உருவான கரு! 5 மாதத்தில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி....பிறகு நடந்த அதிசயம்
ஐந்தரை மாதத்தில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை 2 மாதம் ஐ.சி.யு. சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த அதிசய சம்வம் நிகழ்ந்துள்ளது.
பென்னாகரத்தை சேர்ந்தவர் மாதேஷ் - மங்களம்மாள் ஜோடிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
ஆனால், குழந்தை இல்லாமல் பல்வேறு துயரங்களை இந்த தம்பதி அனுபவித்துள்ளனர். இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை எடுத்தும் பயன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெறுவதற்காக முடிவு செய்தனர்.
இந்த சிகிச்சை வெற்றியடைந்ததை அடுத்து ஒரு குழந்தையின் வருகைக்காக காத்திருந்துள்ளனர்.
3 மத முறைப்படி நடைபெற்ற திருமணம்: மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்
24 வாரங்களில் காத்திருந்த அதிர்ச்சி
24 வாரங்கள் சென்ற பின்னர் வெறும் 600 கிராம் எடையுடன் ஐந்தரை மாதத்தில் தனியார் மருத்துவமனையில் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை ஜி.ஆர்.பி. நியூபார்ன் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அங்கு குழந்தைக்கு நுரையீரலில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக நைட்ரிக் ஆக்சைடு வாயு மூலம் 4 நாட்கள் வெண்டிலேட்டரிலும் 2 மாதம் ஐசியுவில் குழந்தை வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் தொடர் முயற்சியின் காரணமாக 600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் எடை 1.7 கிலோவாக அதிகரித்து உள்ளது.

மீண்டும் பாம்பு பிடிக்க களமிறங்கிய வாவா சுரேஷ் - முரண்டு பிடித்த ராஜநாகம்
மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்
குழந்தையின் பெற்றோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால் பல்வேறு தரப்பினரிடம் ரூ.3 லட்சம் நிதி வசூலித்து மருத்துவர் பூபதி சிகிச்சையளித்துள்ளார்.
இதனால் மருத்துவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.